search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி சம்பவம்"

    • தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
    • கரும்பு ஜூஸ் வாங்குவது போல் நடித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர், திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் கூடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கரும்பு ஜூஸ் பார்சல் கேட்டுள்ளனர்.

    இதனையடுத்து மனோகரன் ஜூசை பார்சல் கட்டிக்ெகாண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 வாலிபர்கள் மனோகரன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மனோகரன் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவம் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது.
    • இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழ்ந்த பூமியாகும். பிரசித்தி பெற்ற சன்மார்க்க திருச்சபையை நிறுவிய வள்ளலார் சபையும், திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவில், அப்பர் பெருமான் கரையேறிய கரைேயறவிட்ட குப்பம் அப்பர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான திருவந்திபுரம் தேவநா தசுவாமி, பண்ருட்டி திருவதிைக வீரட்டானேஸ்வரர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. எனவேதான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்குள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். ஆனால், இவ்வாறு பக்தர்கள் வந்து செல்வதால் கடலூர் நகர் பகுதியில் இரவு-பகல் பாராமல் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே தான் கடலூர் மாவட்டம் ஆன்மிக ஸ்தலம் என சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக கடலூர் நகர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக கடலூர் வண்டிபாளையத்தில் இருந்து கேப்பர்மலை செல்லும் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது.

    முக்கி யமாக வண்டிப்பா ளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து வண்டிப்பாளையம் செல்லும் பகுதி இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் வாகன ஓட்டிகள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். அவ்வாறு வரும் வாகன ஓட்டிகளை பின்தொடர்ந்து அவர்கள் சட்டைப்பையில் இருந்து செல்போன் மற்றும் பணத்தை அலாக்காக பறித்து சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாளுக்குநாள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாளுக்கு நாள் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே, இருள் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். எரியாத மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் கேட்டபோது, வழிப்பறி கொள்ளை சம்பவம் பற்றி எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை. அப்படி புகார் வந்தால் கொள்ளையர்களின் கொட்டம் அடக்கப்படும். இருப்பினும் அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என்றார்.

    ×