search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பாதை"

    • பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால திட்டங்களால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது.
    • பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேட்டியின் போது கூறினார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10-வது ஆண்டில் இருக்கிறோம்.

    பா.ஜ.க. அரசின் திட்டங்களால் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு லேபிள் ஒட்டுகிறது. உதாரணமாக விருதுநகருக்கு மத்திய அரசு கொண்டுவந்த ரூ.2 ஆயிரம் கோடி ஜவுளி பூங்கா திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

    பிரதமர் மோடியின் மந்திரி சபையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ரபேல் குற்றச்சாட்டுக்கு கூட ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். சூடான் உள்ளிட்ட வெளிநாடுகளில் போர் நெருக்கடி ஏற்பட்ட போது அங்கிருந்து இந்தியர்களை மோடி மீட்டுக் கொண்டுவந்தார்.

    இப்போது உலக அரங்கில் இந்தியா பெருமை மிக்க நாடாக விளங்குகிறது. உலகிற்கு கொரோனா தந்த நாடாக சீனாவும், அந்த நோயை போக்கி மக்களை காக்கின்ற மருந்துகளை தந்த நாடாக இந்தியாவும் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு பட்டினி சாவு கூட நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    உலக அரங்கில் கொரோனா மரணம் இந்தியாவில் தான் மிகக் குறைவு. உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 12 சதவீதம் உள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பத்ம பூஷன் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வசதி படைத்தவர்களுக்கு தான் கிடைத்தது. தற்போது நாட்டுக்காக உழைக்க கூடிய சாமானியர்களுக்கும் கிடைக்கிறது.

    மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை என்று கூறி செங்கலை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்த தி.மு.க. தலைவரும், தற்போதைய முதல்வருமான மு. க. ஸ்டாலின் ஜப்பான் சென்ற போது அங்குள்ள சிக்கா நிறுவனத்திற்கு சென்று விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனையை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.

    ×