search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக நிறுவனங்கள்"

    • 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
    • அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள்- சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.

    திருப்பூர்:

    சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டிற்கான விருது வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரால் 2022-23ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, "சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டிற்கான விருது வழங்கப்படும்.

    தனியார் ,பொதுத்துறை , கூட்டுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக (Corporate Social Responsibility Award) தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும். இவ்விருதானது 2022-ம்ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

    தகுதிகள்:

    பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு - அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள்நேரடியாகவோ, தங்களின்அறக்கட்டளைகள், தொண்டுநிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள்- சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.

    பரிசீலனைக்கான கூறுகள்:

    மேற்கண்டநிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட்ட பணிகளேவிருதுவழங்குவதற்கு அடிப்படையாகஎடுத்துக்கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். மேலும் பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    இவ்விருதுக்கு தேவையான விண்ணப்பம் www.tnrd.tn.gov.in. என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இவ்விண்ணப்பம் இணையதளத்தில் செயல்பாட்டு நிலையில் இருக்கும். எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழி மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பான இவ்விருதினைப் பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    ×