search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயல் நிலம்"

    ஆரணியில் மயான பாதையின்றி விவசாய நிலத்தில் பிணத்தை தூக்கி செல்வதால் பெரியளவில் விவசாயம் பாதிக்கபடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களை செய்யாற்றை ஆற்று படுக்கை அருகில் உள்ள மயானத்தில் புதைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மேலும் கடந்த 30ஆண்டுக்கு மேலாக மயானத்திற்கு செல்லும் வழியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாகவும் இதனை தடுக்க ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இறந்தவர்களின் சடலத்தை விவசாய நிலத்தில் கொண்டு செல்வதால் விவசாயம் பெரியளவில் பாதிக்கபடுகின்றன.

    நேற்று முன்தினம் இறந்த ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(75) என்பவரின் சடலத்தை கொண்டு செல்லும் போது விவசாய நிலத்தை சேதபடுத்தி செல்ல நேரிட்டது.

    பிணத்தை சுமந்து சென்ற சில பேர் விவசாய நிலத்தில் விழுந்ததால் விவசாய நிலமும் சேதமடைந்து பொதுமக்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவுபடுத்த வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ×