search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனஉயிரின வார விழா"

    • வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை சார்பில் வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வனஅலுவலர் திலீப், கொடைக்கானல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கோட்டாட்சியர் ராஜா, புதுச்சேரி மாநில வனஅலுவலர் வஞ்சுனாவள்ளி, கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    வனஉதவி பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், அன்னைதெரசா பல்கலைக்கழக மாணவிகள், அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி நிறைவில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.

    உடுமலை :

    வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

    மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

    ×