search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன அதிகாரி தேர்வு"

    • ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்.
    • நான் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஹேமலதா. இவர்களது மகன் கிருபானந்தன் (32). என்ஜினீயரான இவர் வன அதிகாரி தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 16-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    இது குறித்து என்ஜினீயர் கிருபானந்தன் கூறியதாவது:-

    நான் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன்.

    நான் சிறுவயது முதலே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும் என்ற கணவுடன் இருந்தேன். நான் இதுவரை 9 முறை தேர்வு எழுதி உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 9-வது முறையாக பங்கேற்ற நான் தேர்வு எழுதி நேர்முக தேர்வு வரை சென்று உள்ளேன்.

    பின்னர் விடாமுயற்சியாக 10-வது முறையாக 2021-2022-ல் நடைபெற்ற தேர்வை எழுதினேன். இதில் இந்திய அளவில் 16-வது இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்று உள்ளேன்.

    மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் படித்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகஅரசு மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. அதை மாணவர்கள் முறையாக பின்பற்றி படித்து வந்தாலே எந்த ஒரு தேர்வையும் எளிதாக வென்றுவிடலாம். வருகிற ஆகஸ்டு மாதம் டேராடூனில் நடைபெற உள்ள பயிற்சியில் நான் பங்கேற்க உள்ளேன்.

    எனது அண்ணன் முதல் முயற்சியிலேயே ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்வாகி இணை ஆணையராக பெங்களூரில் பணி புரிந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய வன பணி தேர்வில் தேர்வு பெற்ற கிருபானந்தனுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து இந்திய வனப்பணி தேர்வில் கிருபானந்தன் சாதனை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×