search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் கனமழை"

    • வங்காளதேசத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவு பேய் மழை கொட்டியது.
    • கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த மே மாதம் முதல் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன.

    கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளை இழந்த மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

    மழை வெள்ளத்தில் சிக்கி 75 பேரும், மின்னல் தாக்கி 15 பேரும், 2 பே பாம்பு கடித்தும், மேலும் 10 பேர் மற்ற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வங்காளதேசத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவு தற்போது பேய் மழை கொட்டி வருகிறது.
    • கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.

    கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    வீடுகளை இழந்த மக்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழைக்கு இதுவரை சிறுவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×