search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்க கடல்"

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர்.

    வங்க கடலில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுருத்திய நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம். ராமேசுவரம், ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மீன்துறை அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் 2-வது நாளாக பலத்தை சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவது டன் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷ மாக சீறி எழுந்து வருகின்றது.

    இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைப்பு.
    • 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இதனால் 8 மற்றும் 9 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    • பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. 


    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

    ×