search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல்கள் சங்கம்"

    • 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையே 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொருளாளர் சக்தி தேவி மற்றும் வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி, தனபாலன்,வெங்கடாஜலபதி,மாணிக்கராஜ்,மகேஷ்,ராஜேஷ்,மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக மூத்த வழக்கறிஞர்கள் தனபாலன், மாணிக்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்யவும், ஏப்ரல் 27 அன்று ஓட்டுப் பதிவு நடத்தி, அன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

    • உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த மே மாதம் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சார்பு நீதிமன்றத்தையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, ஈஸ்வரமூர்த்தி, மகேஸ்வரன், ராஜேஷ், மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×