search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேணுகாம்பாள் கோவிலில்"

    • ரேணுகாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
    • மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் பூசாரித்தெருவில் உள்ள அம்சா ரேணுகாம்பாள் கோவிலில் 16-வது ஆண்டு நவராத்திரி கொலு வைபவ விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தினமும் இரவு ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, வைஷ்ணவி, அன்னபூரணி, காமாட்சி, மீனாட்சி, கருமாரியம்மன், மகாலட்சுமி ஆகிய அம்சங்களில் இரவு வழிபாடுகள் நடந்தன. 9-ம் நாளான ஆயுதபூஜை தினத்தன்று உற்சவ அம்பாளுக்கு சரஸ்வதி அலங்காரமும், விஜயதசமி அன்று அம்பாளுக்கு ரேணுகாம்பாள் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 11-வது நாளான நேற்று பகலில் மஞ்சள் நீர் உற்சவமும், இரவில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அம்பாள் சயன கோலத்தில் ஊஞ்சலில் அலங்கரித்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு விடையாற்றி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். கொலு வைபவத்தின் நிறைவு நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு உற்சவ ரேணுகாம்பாள் ஆலய உட்பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது."

    • வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவதி
    • விரைவில் ஆடி மாத விழா தொடங்குகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் நேற்று 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகைதந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    விரைவில் ஆடி மாத வெள்ளிக்கிழமை விழா துவங்கும் நிலையில், இப்போதே பக்தர்கள் குவிந்ததால் உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×