search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்கடை ஊழியர்கள்"

    சம்பள உயர்வு கேட்டு கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்கள் வருகிற 15-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். #RationShop

    சென்னை:

    தமிழ்நாடு சிவில் சப்ளை கட்டுப்பாட்டில் செயல்படும் ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கூட்டுறவு சங்க ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி கூட்டுறவு ரே‌ஷன் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி அரசு பணியாளர் சங்க ஆலோசகர் பால் பாண்டியன் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரே‌ஷன் கடை ஊழியர்கள் மற்ற ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளம், பதவி உயர்வு போல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    1 ஆண்டு வேலை பார்த்தால் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஆனால் ரேசன் கடையில் 10 ஆண்டு பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் பணிவரன் முறை இல்லாமல் உள்ளது.

    குடோனில் இருந்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் சரியான எடையுடன் இருப்பதில்லை. 50 கிலோ மூட்டை என்றால் 47 கிலோதான் உள்ளது. இது பற்றி முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை. இறுதியில் ரேசன் கடைக்காரர் மீதுதான் பழி விழுகிறது.

    இதுபோன்ற பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ரேசன் கடை ஊழி யர்கள் 15-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #RationShop

    ×