search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வேலை"

    • விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
    • மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு ஹோஹ் துர்க்கை பகுதியை சேர்ந்தவர் குளத்திங்கல் ஷானு. கால்பந்து வீரரான இவர் கொச்சியில் தங்கியிருந்து தனியார் கிளப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.

    அதனை பயன்படுத்தி பிரபல கால்பந்து லீக் அணியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக காட்டிக்கொண்ட அவர், விளையாட்டு ஒதுக்கீட்டில் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏராளமானோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

    இது தொடர்பாக கொட்டாரக்கரையை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் வேலை வாங்கித் தருவதாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் ஷானு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கஜக்கூட்டம், பூஜப்புரா, கன்னியாபுரம், கொட்டாரக்கரை, கோட்ட யம் கிழக்கு, எர்ணாகுளம் சென்ட்ரல், மானந்தவாடி. ஹோஸ்துர்க், வெள்ளரிக் குண்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஷானு மும்பையில் பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். அங்கு புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக நடன பார் நடத்திய ஷானுவை கைது செய்தனர்.

    பின்பு அவரை விசாரணைக்காக கேரளா அழைத்து வந்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்கள் மற்றும் ரெயில்வேயில் வேலை பெற்ற 12 நபர்கள் மீது சிபிஐ கடந்த மே மாதம் 18ம் தேதி புதிய வழக்கு பதிவு செய்தது. வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 16 பேருக்கு எதிராகவும் சிபிஐ இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரெயில்வேயில் குரூப் டி பதவிகளுக்கு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் ரெயில்வே அதிகாரிகளால், தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டதாகவும், வேலை பெற்ற நபர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மாற்றியபோது அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. ராப்ரி தேவி மற்றும் இரு மகள்களின் பெயரில் விற்பனைப் பத்திரம் மூலம் நிலப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

    ×