search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையத்தில்"

    • டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர்.
    • இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் முள்ளுவாடிகேட் அருகே உள்ள டவுன் ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்னை மார்க்கமாகவும், விருதாசலம் மார்க்கமாகவும் செல்லும் ரெயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ெரயில்வே நிலைய கழிவறை அருகே ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி நிலைய அதிகாரிகள் டவுன் போலீசாருக்கும், சேலம் ெரயில்வே பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து ெரயில்வே போலீசார், டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .

    அழுகிய நிலையில் காணப்பட்ட நபர் வயது 45 இருக்கலாம் எனவும், அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    ரெயில் நிலையம் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது வாங்கி குடித்துவிட்டு மது போதையில் அவர் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்க ளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    எப்போதும் பரபரப்பாக காணக்கூடிய டவுன் ெரயில் நிலையத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    ஈரோடு,ஜூலை. 25-

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை 21 நாட்கள் இந்த பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் மாற்று வழி பாதையில் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்று வழி பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூர்- மயிலாடுதுறை (16232) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையம் வராமல் நாமக்கல் வழியாக கரூருக்கு செல்லும்.

    இதேப்போல் மைசூர்- தூத்துக்குடி (16236) எக்ஸ்பிரஸ் ரெயில், வாஸ்கோடகாமா -நாகப்பட்டினம்(17315) எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீமதா வைஷ்னோதேவி கற்றா- திருநெல்வேலி (16788) எக்ஸ்பிரஸ் ெரயில், சண்டிகர்- மதுரை (12688) எக்ஸ்பிரஸ் ரயில், ஒக்கா-தூத்துக்குடி (19568) எக்ஸ்பிரஸ் ரயில், காச்சகுடா - மதுரை (17615) எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி- மைசூர் (16235) எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி- ஸ்ரீ மதா வைஷ்னோ தேவி கற்றா (16787) எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- சண்டிகர் (12687), எக்ஸ்பிரஸ் ெரயில், தூத்துக்குடி -ஒக்கா (19567) எக்ஸ்பிரஸ் ெரயில், நாகப்பட்டினம்-வாஸ்கோடகாமா (17316) எக்ஸ்பிரஸ் ெரயில், மதுரை- காச்சகுடா (17616) எக்ஸ்பிரஸ் ெரயில், மயிலாடுதுறை-மைசூர் (16231) எக்ஸ்பிரஸ் ெரயில் ஆகிய ரயில்கள் பராமரிப்பு நாட்களான 24.7.2022 முதல் 13.8.2022 வரை 21 நாட்கள் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு மாற்று பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு (06846) இயக்கப்படும் சிறப்பு ெரயில் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு (06845) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை 22 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் ஈரோட்டிலிருந்து மேட்டூர் அணைக்கு (06407) இயக்கப்படும் சிறப்பு ெரயில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஈரோட்டுக்கு (06408) இயக்கப்படும் சிறப்பு ெரயில்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0424 - 2284812 என்ற உதவி எண்ணை அழைத்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×