search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.950 கோடி இழப்பு"

    தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லாததால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    சென்னை:

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் இந்திய அணு மின்கழகத்தின் நிர்வாகத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

    முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 60 நாட்கள் கூடங்குளம் அணு மின்நிலையம் மூடப்பட்டது.

    ஆனால் எரிபொருள் நிரப்புவதில் தன் சொந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் தகுதித்திறன், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்; அதாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப தேவையான தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தன்னிடம் இல்லை என்பதை இந்திய அணு மின் கழகம் தாமதமாக உணர்ந்தது.

    அதன்பின்னர் இந்திய அணுமின் கழகம், ரஷியாவில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்களை அனுப்பி வைப்பதற்கு மாஸ்கோவில் உள்ள ஏ.எஸ்.இ. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.

    ஆனால் இதற்கான செலவு 76 சதவீதம் அதிகமாக இருந்தது. கூடங்குளம் அணுமின்நிலையம் மூடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாலும், நேரம் இல்லாமல் போனதாலும் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் போனதால் அதிக செலவினத்தை இந்திய அணுமின் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    மேலும் குறிப்பிட்ட 60 நாட்களுக்கு பதிலாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை 222 நாட்கள் மூட வேண்டியதாகி விட்டது.

    இதில் இந்திய அணு மின்கழகம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல்கள், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. 
    ×