search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்சர் அங்கீகாரம்"

    • தமிழகத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.
    • அண்மையில் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

    சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. ராம்சர் உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதனையடுத்து 2014ம் ஆண்டு முதல் 2022 வரை, 49 புதிய ஈரநிலங்களை ராம்சர் அங்கீகார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் 13,26,677 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 75 ராம்சர் தளங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்களை இந்தியா சேர்த்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் அண்மையில் 6 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம், முதுகளத்தூர் அருகில் உள்ள காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    ×