search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ தளம்"

    • ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது.
    • பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதி யில் இஸ்ரேல், டிரோன் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் ஷேக்சலே-அல்-அரூரியை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. அதன் படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டது. 62 வகை ஏவுகணைகளை வீசி மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் தாக்கப்பட்டது என்று தெரிவித்தது.

    இந்த தாக்குதலால் ஓடு பாதை சேதம் அடைந்தது என்றும் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்கள் இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

    சோமாலியாவில் 27 ராணுவ வீரர்களை கொன்று ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் பயங்கரவாத குழு அறிவித்துள்ளது. #Somalia #alShabaab
    மொகாடிஷு:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது.  ‘வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம்’ என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 
    உலகின் மிக உயரமாக ராணுவ தளமான சியாச்சினுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்று வீரர்களிடம் கலந்துரையாடினார். #PresidentKovind #SiachenBaseCamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் இமய மலை சிகரத்தில் சியாச்சின் உச்சி உள்ளது. உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது. குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

    கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு சேவையாற்றும் இந்திய ராணுவ வீரர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து கலந்துரையாடினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூனுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் சென்றுள்ளார்.



    முதன்முறையாக 2004-ம் ஆண்டு அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது சியாச்சின் தரை முகாம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PresidentKovind #SiachenBaseCamp
    ×