search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணிப்பேட்டை அய்யப்பன் கோவில்"

    சபரிமலைக்கு போக முடியாததால் ராணி பேட்டையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடிகட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். #AyyappaDevotees
    வாலாஜா:

    ஆண்டுதோறும் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். இதையொட்டி, அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இந்த ஆண்டும், வேலூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

    இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அய்யப்பன் கோவிலுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பம்பை ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் பக்தர்கள் சபரி மலைக்கு வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

    இதனால் தவித்த தமிழக பக்தர்கள், அந்தந்த பகுதி அய்யப்பன் கோவில்களில் இருமுடிக்கட்டி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும், அந்தந்த பகுதி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    வேலூர், காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்றுகாலை ராணிப்பேட்டை சிப்காட் சபரி நகரில் உள்ள ஸ்ரீநவ சபரி அய்யப்ப கோவிலில் இன்று காலை வேண்டுதலை செலுத்தினர்.

    நெய் அபிஷேகம் செய்யலாம் என குருசாமி ஜெயச்சந்திரன் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, அய்யப்ப பக்தர்கள் இரு முடியுடன் 18 படியேறி சாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விரதத்தை முடித்தனர்.

    இதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.  #AyyappaDevotees



    ×