search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் பாப்பர்"

    • இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக லக்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.
    • இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராஜ்பாப்பர் தெரிவித்துள்ளார்.

    லக்னோ :

    பிரபல இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்புகள் வகித்துள்ளார். 3 முறை மக்களவை எம்.பி மற்றும் 2 முறை மாநிலங்களவை எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ் பாப்பர் போட்டியிட்டார். அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குசாவடி ஒன்றில் அலுவலரை பணிசெய்ய விடாமல் தடுத்து அவரை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக லக்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில், லக்னோவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் கடந்த நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ராஜ் பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராஜ்பாப்பர் தெரிவித்துள்ளார்.

    ×