search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசிபுரம் உழவர் சந்தை"

    ராசிபுரம் உழவர் சந்தையில் அவரைக்காய் 1 கிலோ அதிகப்பட்சமாக ரூ.40-க்கு விலை போனது. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது.

    ராசிபுரம்:

    இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராசிபுரம் உழவர் சந்தைக்கு வழக்கம்போல் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நாட்களில் 20 டன் வரை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விவசாயிகள் கத்தரிக்காய், பீர்க்கங்காய், சுரக்காய், வெண்டக்காய் மற்றும் பழ வகைகள், கீரை வகைகள் உள்பட 43 வகையான விளை பொருட்களை முள்ளுகுறிச்சி, மெட்டாலா, நாரைக்கிணறு, உரம்பு, ஓசக்காரன்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இன்று 14.835 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. 

    ராசிபுரம் உழவர் சந்தைக்கு வழக்கமாக 1 டன் வெண்டைக்காய் வரும். ஆனால் இன்று 400 கிலோ மட்டுமே கொண்டு வந்திருந்தனர். 1 கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை ஆனது. புதிய இஞ்சி ரூ.40 முதல் 50-க்கும், பழைய இஞ்சி 1 கிலோ ரூ.100-க்கும் விற்பனை ஆனது. அவரைக்காய் 1 கிலோ அதிகப்பட்சமாக ரூ.40-க்கு விலை போனது. இது உச்ச கட்ட விலை ஆகும். அதேசமயத்தில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.20-க்கு விற்றது. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது. மற்ற காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வழக்கம்போல் விற்பனை செய்யப்பட்டன.

    ×