search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி பாதயாத்திரை"

    • ராகுல் காந்திக்கு முதல் கதர் ஆடையை குமரி அனந்தன் அணிவிக்கிறார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறது. காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரையாக நடந்து செல்கிறார்கள். 150 நாட்கள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த பாதயாத்திரையின் போது நாடுமுழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையை தொடங்கும் முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

    இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணி அளவில் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் அவர்களை பார்த்து கையசைத்தபடியே நினைவிடத்துக்குள் சென்றார்.

    அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. காலை 7.28 மணிக்கு ராகுல்காந்தி அந்த தரைவிரிப்பில் அமர்ந்து பிரார்த்தனையை தொடங்கினார். காலை 7.44 மணி வரை 16 நிமிடங்கள் அவர் பாத யாத்திரை வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

    இதையொட்டி நினைவிட வளாகத்தில் வீணை காயத்ரியின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் சர்வமத பாடல்கள், தேசபக்தி பாடல்கள் ஆகியவை இசைக்கப்பட்டன. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் ராகுல் காந்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இசை நிகழ்ச்சி நடத்திய வீணை காயத்ரியின் அருகில் சென்று நன்றி தெரிவித்தார்.

    பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றடைகிறார்.

    இன்று பிற்பகலில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

    அதன்பிறகு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அதன்பிறகு ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். ராகுல் காந்திக்கு முதல் கதர் ஆடையை குமரி அனந்தன் அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    அதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பாத யாத்திரையின் நோக்கம் குறித்து எழுச்சி உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள விவேகாந்தா கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கேரவனில் ஓய்வெடுக்கிறார். நாளை (வியாழக்கிழமை) அங்கிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார்.

    10-ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைய உள்ளார்.

    முன்னதாக இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஸ்வநாதன், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், நாசே.ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உ.பலராமன், அருள் அன்பரசு, தாமோ தரன், சுமதி அன்பரசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்க கட்சியின் அகில இந்திய தலைமை சார்பில் நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் , தொண்டர்கள் அவருடன் நடைபயணம் செல்ல உள்ளனர்.

    நாகர்கோவில்:

    இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

    மத்தியில் ஆட்சியை இழந்ததோடு, பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பை இழந்தது. அதோடு கட்சியின் மூத்த தலைவர்களும், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கட்சிக்கு நிலையான தலைவர் ஒருவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ராகுல் காந்தியை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு ராகுல் காந்தி இதுவரை உறுதியான பதில் எதுவும் கூறவில்லை. அதே நேரம் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரும் முன்பு சோர்ந்து கிடக்கும் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்க அவர்கள் அனைவரையும் நேரில் சந்திக்க திட்டமிட்டார்.

    இதற்காக அவர் இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்தார்.

    அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது.

    12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான திட்டமிடல் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது.

    டெல்லியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி என பலரும் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாத யாத்திரை பயணத்தை ஒருங்கிணைத்தனர். இப்பணிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார். நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் காமராஜர் நினைவு இல்லம், காந்தி மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

    அதன்பின்பு ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்குகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கதரால் ஆன தேசிய கொடியை அவர் ராகுல் காந்தியிடம் வழங்கியதும் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்குகிறார்.

    கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்து செல்லும் ராகுல் காந்தி அங்கிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    கூட்டத்தில் பாத யாத்திரையின் நோக்கம் உள்பட கட்சியின் திட்டங்கள் குறித்து பேசுகிறார்.

    இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஸ் பாகல் மற்றும் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார்.

    மறுநாள் 8-ந்தேதி மீண்டும் பயணத்தை தொடங்கும் அவர் 10-ந் தேதி வரை 4 நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் குமரி மாவட்டத்தில் பயணம் செய்கிறார்.

    ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்க கட்சியின் அகில இந்திய தலைமை சார்பில் நிர்வாகிகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் , தொண்டர்கள் அவருடன் நடைபயணம் செல்ல உள்ளனர். இதற்காக கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாகவே தொண்டர்கள், நிர்வாகிகள் முகாமிட்டு உள்ளனர்.

    இது தவிர ராகுல் காந்தி நடை பயணம் செல்லும் வழியில் மக்களை சந்திக்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்றடையும் வரை சுமார் 1 கோடி மக்களை சந்திப்பார் எனக்கூறப்படுகிறது.

    கன்னியாகுமரிக்கு ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வர இருப்பதால் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் பாதைகளிலும் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல் காந்தி தனது நடை பயணத்தை தொடங்குகிறார்.
    • நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரை மேற்கொள்கிறார். வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளது. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும். எங்கெல்லாம் இரவு ராகுல் காந்தியும் பாதயாத்திரை குழுவினரும் தங்குகிறார்களோ அங்கு இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்படும்.

    ×