search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷ்ய அதிபர்"

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
    • இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

    உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    உக்ரைனில் உள்ள டாநட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

    ×