search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய தூதர் ஜோன் ஹன்ட்ஸ்மான்"

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். #TrumpPutinMeet #JonHuntsman
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளாக திகழ்வது அமெரிக்கா மற்றும் ரஷ்யா. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இரு நாட்டு அதிபர்கள் இடையிலான முதல் சந்திப்பு ஜூலை 16-ல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடக்க உள்ளது என வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜான் பால்டன், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும். அத்துடன், உலகளவிலும் நிலவி வரும் பெரும் பதட்டத்தை தணிக்க உதவும் என தெரிவித்துள்ளார். 
    #TrumpPutinMeet #JonHuntsman
    ×