search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவை சமையல்"

    • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
    • இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவா - 1 கப்

    நெய் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    தயிர் - 1/4 கப்

    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    தேவையான அளவு - உப்பு

    பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை

    முந்திரிப் பருப்பு - 10

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி - 1 சிறிய துண்டு

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

    ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

    வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

    20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

    இப்போது சுவையான ரவா இட்லி தயார்.

    • இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
    • சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை ரவை - 1 கப்

    பாசி பருப்பு - அரை கப்

    உப்பு - சுவைக்கு

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    தண்ணீர் - 3 கப்

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    முந்திரி - 6

    செய்முறை :

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.

    அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

    பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.

    விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.

    அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.

    • வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
    • இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - 150 கிராம்

    தயிர் - அரை கப்

    உருளைக்கிழங்கு 2

    வெங்காயம் - 2

    பச்சைமிளகாய் - 2

    தக்காளி - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    சோம்பு - தாளிக்க

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

    அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.

    இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.

    ×