search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரயில் சேவை"

    • டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.

    மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • 15 ஆண்டுகளுக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு செய்த ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.அறந்தாங்கியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற பணிகள் நடைபெற்று வந்தது. அதன் காரணமாக அறந்தாங்கி மார்கமாக செல்லக் கூடிய ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்றும் சில ஆண்டுகள் ரயில் சேவைகள் தொடங்கப்படாத நிலையில் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு காரணமாக செயல்பட்ட ரயில் கோட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வர்த்தக சங்க தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், திருச்சி ரயில் கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும் அறந்தாங்கி மார்க்கமாக சென்னைக்கு செல்ல வாரத்தில் 3 நாட்கள் ரயில்கள் இயக்கப்படுகிறது, இதனை பழைய முறைப்படி வாரத்தில் அனைத்து நாட்களும் ரயில் சேவை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் ஏற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி, கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கம் மற்றும் ரயில் கோட்ட உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது
    • பராமரிப்பு பணிகள்

    கரூர்:

    சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர்-திருச்சி ெரயில்வே வழித்தடத்தில் மாயனுார் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பயணிகள் ெரயில் (எண்-06882) மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சிக்கு செல்லும் ெரயில் சேவையும், திருச்சி-கரூர் பயணிகள் ெரயில் (எண்-06123) திருச்சியில் மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூருக்கு வரும் ெரயில் சேவையும் மேற்கண்ட இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • மற்ற ெரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கைய டக்ககருவி வழங்கப்படும்.
    • சேலம் ரெயில் கோட்டத்தில் முதல்முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

    கோவை:

    சேலம் ரெயில் கோட்டத்தில் முதல்முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக்கருவி வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், பயணி–களின் விவரங்களை விரைவாக சரிபார்க்க முடியும். அதோடு, யார் பயணிக்கவில்லை என்ற விவரம் பதிவேற்றப்படும். இதனால், அவர்கள் டிக்கெட் கட்டணத்தை எவ்வித சிக்கலும் இன்றி விரைவாக பெற இயலும்.

    மேலும், டிக்கெட் உறுதிசெய்யப்பட்டு, படுக்கை கிடைக்காத பயணிகளுக்கு, வரிசைப்படி வெளிப்படையாக படுக்கையை ஒதுக்க முடியும்.

    முன்பு ெரயிலில் பயணிப்போரின் டிக்கெட்டை பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளின் விவரங்கள் அடங்கிய நீளமான காகிதத்தில், ஒவ்வொ–ருவரின் விவரமாக சரிபார்த்து குறித்து வந்தனர். இனிமேல், அந்த காகிதங்கள் தேவைப்படாது. இதேபோல, மற்ற ெரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கைய டக்ககருவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×