search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரந்தீப் சுர்ஜித் வாலா"

    அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    சண்டிகர்;

    அரியானா மாநிலத்தில் ஜிந்த் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் கிருஷ்ணா நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜித் வாலா நிறுத்தப்பட்டார். ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் திக்விஜய் சவுதாலா போட்டியிட்டார்.

    கடந்த திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு அங்குள்ள அர்ஜுன் ஸ்டேடியத்தில் ஜிந்த் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷண் லால் மித்தா 50,566 வாக்குகள் பெற்று, 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 



    இந்நிலையில், அரியானாவின் ஜிந்த் சட்டசபை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜிந்த் தொகுதி மக்களுக்கு நன்றி. பாஜக வாக்குறுதி அளித்தபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சேவையாற்றும் அரியானா முதல் மந்திரி மற்றும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Jindbypoll #BJP #KrishanLalMiddha #Modi
    ×