search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினி காந்த் அரசியல்"

    நீண்ட நாட்கள் மன்றத்தில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்க்க கூடாது என்று ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் எப்போது கட்சியைத் தொடங்குவார் என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.

    தற்போது படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி, கட்சிப் பெயர் மற்றும் கொடி, கொள்கைகளை அறிவிப்பதற்கு முன்பு தனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றங்களை ‘‘ரஜினி மக்கள் மன்றம்’’ என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்துக்கு வரும் வெளிமாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் சில கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் கூறப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தலில் டிக்கெட் கொடுப்பது தொடர்பான சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும். எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது.

    மன்றத்தில் உள்ள சில நிர்வாகிகள் தாங்கள் நீண்ட ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருப்பதால், தங்கள் அனுபவம் மற்றும் விசுவாசத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட தங்களுக்கே டிக்கெட் தர வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

    தேர்தல் வரும்போது யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். யாருக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பதும் அவருக்கு தெரியும்.

    எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், நீண்ட நாள் ரசிகர்களும் எம்.எல்.ஏ. சீட்டை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கு பதில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் கட்சி தொடங்க முடியும். எனவே அதிகமான உறுப்பினர்களை சேர்த்துக் காட்டுங்கள்.

    இவ்வாறு ரஜினி மன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

    ரஜினி சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்த உத்தரவு மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்களாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரஜினி கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புபவர்களின் பண பின்புலம் பற்றி தனியாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் ரஜினி மன்றத்தில் உள்ள நடுத்தர வகுப்பை சர்ந்தவர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற கட்சிகளைப் போல பணம் இருப்பவர்களுக்குத் தான் ரஜினியும் டிக்கெட் கொடுப்பாரா? என்று நீண்ட நாள் ரசிகர்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    நடிகர் ரஜினிகாந்த், வருகிற 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சிக்கான அடிப்படையான வலுவான கட்டமைப்பை நடிகர் ரஜினி திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்.

    கடந்த வாரம் முதலில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். அடுத்த சில நாட்களிலேயே இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்தார். அந்த வரிசையில் வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதற்கும் அடுத்து 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

    மாவட்டத்துக்கு குறைந்தது 15 பேர் என்றாலும் சுமார் 500 பேர் திரள்வார்கள். எனவே இதுவரை நடத்தியதுபோல வீட்டில் சந்திப்பது சிரமம். எனவே ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழவிருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினி அது முதலே மண்டபத்தில் தான் சந்திப்புகளை நிகழ்த்தி வந்தார். ஆனால் செய்திகள் வெளியில் கசியவே வீட்டை தேர்ந்தெடுத்தார். ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்திலும் இதே ரகசியத்தை கடைபிடிக்க மன்ற நிர்வாகிகள் திட்டமிட்டு வருகிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

    புதுக்கட்சியை தொடங்காமலேயே அரசியல்வாதியாகிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இது போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்கள் ஆளாளுக்கு ரஜினியை வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ரஜினி தனது அரசியல் பாதையை வகுத்து பயணிக்க தொடங்கி விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

    மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.


    கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அதன் பின்னர் 2 மாதங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். அதற்குள் கமல் புதிய கட்சியை தொடங்கி ஊர் ஊராக செல்ல தொடங்கிவிட்டார். இதனால் என்னாச்சி ரஜினிக்கு? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

    இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

    நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

    இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.


    அந்த விழாவில் ரஜினி கூறிய தவளை கதை, தன்னை தினமும் விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரஜினியை பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவை எதற்குமே ரஜினி பதில் கூறுவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்காகவே தவளை கதையை கூறி தெளிவு படுத்தியுள்ளார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 3 தவளைகள் மலை ஏறும் போது, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் ஏறமுடியாது என்று கூறியதையும் தாண்டி ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

    ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

    இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளதாக கூறும் ரஜினி, அதற்காக நகர்த்தி வரும் காய்கள் வெற்றிக் கோட்டை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். #Rajinikanth #RajiniMakkalMandram
    ×