search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் தீ"

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவலர்களின் இருசக்கர வாகனங்கள் தீயில் இருந்து நாசமாயின.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இரு சக்கர வாகனங்கள் தீயில் இருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் இருசக்கர வாகனங்கள் தீயில் இருந்து நாசமாயின.

    காலை பணிக்கு செல்வதற்காக காவலர் ஒருவர் எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் முழுவதுமாக தண்ணீரை பிச்சி அடித்து தீயை அணைத்தனர்வாகனத்தில் இருந்த என்ஜின் மற்றும் சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இரு சக்கர வாகனத்தின் கவர் மூலம் தீப்பற்றி எரிந்துள்ளதாக கூறப்படுகிறது

    இருந்த போதிலும் மர்ம நபர்கள் யாரேனும் காவலர் குடியிருப்பில் புகுந்து இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொதுமக்களை பாதுகாக்கும் காவலர் குடியிருப்பிலேயே இருசக்கர வாகனங்களை தீ விபத்துக்குள்ளாகி எரிந்திருக்கும் நிலையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பார்ப்பதற்கு கண்காணிப்பு கேமரா கூட இல்லாமல் போலீசார் திக்குமுக்காடி வருகின்றனர்

    • மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம். சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ராஜபிரதீப் (வயது21). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை, முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டதாக முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். மேலும் மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இவரது வீட்டின் வாசலில் ஏதோ தீபற்றி எரிவதுபோல் திடீரென வெளிச்சமாக தெரிந்தது. இதையடுத்து அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×