search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொழிப்போர் தியாகி தினம்"

    • கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    • மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    மொழிப்போர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் நினைவிடம் மூலக்கொத்தளத்தில் உள்ளன.

    மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் இன்று அவர்களது நினைவிடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த மூலக்கொத்தளம் வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுடன் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபிநேசர், மாவட்ட செயலாளர் இளைய அருணா, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், பி.டி.பாண்டிச் செல்வம், மண்டல தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், நிர்வாகிகள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோபி, தீனதயாளன், வி.வி.ரமேஷ், ஆர்.எம்.டி. ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல வளசரவாக்கத்தில் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.எல். ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், ராஜா, நிர்வாகிகள் கனிமொழி தனசேகரன், கவுன்சிலர் ரத்னா லோகேஷ், துரைராஜ், தங்கராஜ், தென்னரசன், ரஞ்சித்குார், வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், மைக்கேல், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×