search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொரப்பூர்"

    • இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்கிறது.
    • 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது.

    திருப்பூர்

    மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மொரப்பூரில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தினமும் மாலை 4:20மணிக்கு சென்னையில் புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 7:10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 4:55க்கு மங்களூரில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 8:05 க்கு சென்னை செல்கிறது.சென்னையில் இருந்து மங்களூருக்கு (12685) செல்லும் போது, ஜோலார்பேட்டை - சேலம் இடையே மொரப்பூரில் இரவு 8 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் நிற்கிறது. அதே நேரம், மங்களூருவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் போது மதியம் 2:40க்கு சேலத்தை கடக்கும் ரெயில் மாலை 4:30க்கு ஜோலார்பேட்டையில் தான் நிறுத்தப்படுகிறது. மொரப்பூரில் நிறுத்தப்படுவதில்லை.

    இது குறித்து திருப்பூர் ெரயில் பயணிகள் கூறியதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ஜோலார்பேட்டைக்கு பயணிக்கும் ெரயில்களில் இன்டர்சிட்டி, சென்னை எழும்பூர் ஆகிய ெரயில்கள் மதியத்துக்கு முன்பாக மொரப்பூர் கடந்து விடுகிறது.மாலையில் கோவை எக்ஸ்பிரஸ், இரவில் சபரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வடமாநிலத்தில் இருந்து வரும் வாராந்திர ெரயில்கள் நின்று சென்றாலும், அவற்றில் ெரயில் பெட்டிகளில் கால் வைப்பதுக்கு கூட இடமிருப்பதில்லை. தர்மபுரி, பொம்மிடி, வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர், திருவண்ணாமலை பகுதிக்கு மொரப்பூரில் இருந்து செல்வோர் பலர் உள்ளனர்.மங்களூரு செல்லும் போது நிறுத்தப்படும் ரெயில் சென்னை திரும்பும் போது நிறுத்தப்படாததால் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மங்களூரு - சென்னை ெரயிலை மொரப்பூரில் மாலையில் நிறுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    ×