search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மமாக இறந்து கிடந்த கோழிகள்"

    மேலகிருஷ்ணன் புதூர் அருகே பண்ணையில் காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்த கோழிகள். மர்மவிலங்குகள் தாக்கியதா? என அச்சம்.
    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர்  பாலமுருகன் (வயது 50). இவர்  ஆத்திக்கா ட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலை புதூரில் 2 ஏக்கர் நிலத்தில் மாடு, ஆடு, கோழிகளை வைத்து பண்ணை நடத்தி வருகிறார். 

    இந்த பண்ணையில் சுற்றுச்சுவர் உள்ளது. இந்த நிலையில் பண்ணைக்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளில் 30-க்கும் மேற்பட்டவை கழுத்தில் காயத்துடன் நேற்று மர்ம மான முறையில் இறந்து கிடந்தன. இதனைக் கண்ட வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அனைத்துக் கோழிகளின் கழுத்துப்பகுதியிலும் காயங்கள் காணப்பட்டன. எனவே கோழிகளை மர்ம விலங்கு கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மர்ம விலங்குகள் கோழியை கொன்று முழுவதுமாக சாப்பிட வில்லை. கழுத்தில் கடித்து ரத்தத்தை மட்டும் குடித்துள்ளதாக தெரிகிறது. 

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆத்திக்காட்டு விளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜய குமார் நேரில் வந்து பார்வை யிட்டார்.  30க்கும் மேற்பட்ட கோழிகள் அனைத்தும் இறந்த நிலையில் கிடந்ததை அப்பகுதி மக்கள் அனை வரும் சோகத்துடன் பார்த்து சென்றனர்.

    இதே பண்ணையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 5 ஆடுகள் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது சம்பவமாக கோழிகள் அதேபோல் இறந்து கிடக்கின்றன.

    இதுதொடர்பாக  மாவட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட  துறை  அதிகாரிகள் பண்ணையை நேரில் ஆய்வு செய்து ஆடுகள், கோழிகள் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மர்ம விலங்குகளின் அட்டகா சத்தை ஒடுக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    ×