search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை திட்ட அறிக்கை"

    மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #MekedatuDam #SupremeCourt
    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. அத்துடன் அணை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்துள்ளது.

    இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


    ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.

    மேலும், தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது. #MekedatuDam #SupremeCourt
    ×