search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ விபத்து"

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
    • பஸ்சில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    மேற்கு மெக்சிகோவில் உள்ள டிஜூவானா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் 6 பேர் மற்றும் டொமினிகன் குடியரசு, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    பர்ரான்கா பிளாங்கா அருகே மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பஸ்சில் பயணம் செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    விபத்தில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
    • பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

    மெக்சிகோசிட்டி:

    மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது. இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோவில் ரெயில் சிக்னல்கள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

    • விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
    • பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார்.

    இந்த தொங்கு பாலம், மர பலகைகள் மற்றும் உலோக சங்கிலிகளால் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. மேயரால் பாலம் திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பாலம் திறப்பதற்கு முன்பு சிலர் அதன் மீது குதித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்த சம்பவம் மேயர் மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×