search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ அதிபர்"

    மெக்சிகோவில் பதவி விலக இருக்கும் அதிபர் என்ரிக் பெனா நியடோ தான் பயணம் செய்த அதி நவீன சொகுசு விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். #Mexicopresident #plane
    மெக்சிகோசிட்டி:

    மெக்சிகோவில் ஜூலை மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஆண்ட்ரூஸ் மானுவேல் லோபஸ் ஒப்ரேடர் அமோக வெற்றி பெற்றார். அவர் வருகிற டிசம்பரில் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.

    பதவி விலக இருக்கும் அதிபர் என்ரிக் பெனா நியடோ பயணம் செய்ய அதி நவீன போயிங் டிரம்ப் லைனர் 787 என்ற சொகுசு விமானம் வாங்கப்பட்டது. 300 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை அதிபர் என்ரிக் மட்டும் பயன்படுத்தி வந்தார்.

    இந்த நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள லோபஸ் ஒப்ரேடர் இந்த விமானத்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஆடம்பரமான இந்த விமானம் தேவையற்ற செலவு என தெரிவித்துள்ளார். எனவே அதை விற்க முடிவு செய்துள்ளார்.

    அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக விமானத்தை பார்வையிட்டு அதை வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் விமானத்தை பார்த்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் அந்த விமானத்தை மெக்சிகோ தொழில் அதிபர் கஸ்டாவோ ஜிமென்ஸ் பொன்ஸ் என்பவர் ரூ.630 கோடிக்கு விலைக்கு வாங்க இருக்கிறார். இந்த விமானத்தை அதிநவீன மயமாக்கி வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார். அதில் பயணம் செய்வோரிடம் மணிக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். #Mexicopresident #plane
    ×