search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூவர்கண்டியம்மன் கோவில்"

    • ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது.
    • மூவர்கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது.

    வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர் கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தேரை இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது தேர்திருவீதி உலா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×