search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூன்றாண்டு சிறை"

    உத்தரபிரதேசம் மாநிலம், ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது வெடித்த வன்முறையில் சுமார் 100 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #45accused #JawaharBaghviolence
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகருக்கு அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில்  2-6-2016 அன்று சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற போலீசார் முயற்சித்த போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

    இந்த மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

    இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த சந்தன் போஸ், அவரது மனைவி பூனம் போஸ் மற்றும் இன்னொரு பெண்ணான ஷியாம்வதி ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள 45 பேருக்கு அவரவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கேற்ப அதிகபட்சமாக தலா மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். #45accused #JawaharBaghviolence
    ×