search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகையிட்ட"

    • இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை.
    • ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கடைவீதி பஸ் நிலையம் பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களிலேயே பட்டாசு கடைகள் நடத்தப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முற்றுகை

    இந்த இடத்தை பார்வையிட தாசில்தார் வெங்கடேசன் வந்தார். அப்போது பழைய பட்டாசு கடை உரிமையாளர்கள் இந்த இடம் சரியானதாக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்திருந்த இடத்திலேயே பட்டாசு கடை வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டனர். மேலும் பட்டாசு கடை வியாபாரிகள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. தாசில்தாரிடம் இந்த இடம் போதுமானதாக இல்லை. வியாபாரிகள் கொண்டு வந்த பட்டாசுகளை பாதுகாக்கவும் முடியாது. மழை நேரம் என்பதால் இந்த இடத்தில் விற்பனை செய்ய இயலாது. வேறு இடம் வழங்க வேண்டும் என கூறினார். இது பற்றி கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என தாசில்தார் வெங்கடேசன் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கோரிக்கை

    இது குறித்து ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    தற்போது 3 கிலோ மீட்டர் தூரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், வெளியூர் பயணிகள் யாரும் வாங்க முடியாத அளவிற்கு வாகன வசதி இல்லாத இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு கடைகாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். மாவட்ட கலெக்டர் இந்த இடத்தை மாற்றி பழைய இடத்திற்கே வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×