search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி"

    • வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடினர்
    • கண்காணிப்பு கேமரா வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995 முதல் 98-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுக முதலி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மேகலா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் விஐபி பாதுகாப்பு போலீஸ் அதிகாரியமான தயாளன் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளி விழாவையொட்டி கலாசார திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 1970-ம் ஆண்டு முதல் பாலிடெக்னிக்கில் படித்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் கல்லூரிக்கு நிதியுதவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    • முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.
    • முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி ,

    கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் பேசுகையில் அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைந்துள்ளனர். தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெற போட்டித் தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று பேசினார்.

    விழாவில் தொலைக்காட்சி நடிகர் பழனி கலந்து கொண்டு நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் வாழ்க்கை வளமாகும் என்று பேசினார். நூலகர் தனசீலன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.

    முன்னதாக அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது. கணினி அறிவியல் துறை தலைவி ராஜலட்சுமி வரவேற்றார். லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் லாஸ்யா தொடக்க உரையாற்றினார். கல்லூரி தாளாளர் கூத்தரசன் வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் தனபால் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். முடிவில் ஆங்கில துறை தலைவர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
    • முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கடந்த, 1972-ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பொன்விழா ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி, கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதே ஆண்டு கல்லூரியில் படித்த முன்னாள் எம்.எம்.ஏ. முனிவெங்கடப்பன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி படிப்பை முடித்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டேராடூன், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் பணிகளுக்கு சென்று குடும்பத்துடன் வசித்துவரும் அவர்கள் இந்நிகழ்ச்சிக்காக தங்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

    அவர்கள் கூறுகையில், 50 ஆண்டுகள் கழித்து நண்பர்கள் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், நடராஜன், சாம் இன்பராஜ், ஸ்டான்லி ஜோன்ஸ், தினகரன், பாண்டியன் உள்பட, 45-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    ×