search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்ல் டெஸ்ட்"

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvSL #PatCummins
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

    முதல் நாளில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் லாபஸ்சேக்னே மற்றும் டிராவிஸ் ஹெட்டின் பொறுப்பான ஆட்டத்தால் 323 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்சின் மிரட்டலான பந்து வீச்சில் இலங்கை அணி சிக்கியது.

    இதனால் இலங்கை அணி 50.5 ஓவரில் 139 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிமானே 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஜே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற்து. பேட் கம்மின்ஸ்  ஆட்ட நாயகன் விருது பெற்றார். #AUSvSL #PatCummins
    ×