search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகுளத்தூர் போலீஸ் நிலையம்"

    முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
    முதுகுளத்தூர்:

    மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் சோனை மகன் வெற்றிச்செல்வம் (வயது25), இவரும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்த தனுஷ்கோடி மகள் சுஷ்மிதாவுக்கும் (23) கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.

    பின்னர் மதுரை மாடக்குளம் அய்யனார் கோவிலில் வெற்றிச்செல்வம், சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் வெற்றிச் செல்வத்தின் அம்மா பிறந்த ஊரான முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.

    முதுகுளத்தூர் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. #tamilnews
    முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலைய வளாகத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தி வரும் லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கீழத்தூவல் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவை பெற்று உரிமையாளர்கள் லாரியை எடுத்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு இருந்த 2 லாரிகளில் இருந்த டயர்கள், பேட்டரிகள் ஆகியவை திருட்டுபோயின.

    இதுகுறித்து அறிந்த கீழத்தூவல் போலீசார் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது டயர், பேட்டரிகளை திருடியது கீழகொடுமலூரைச் சேர்ந்த கருப்புராஜா, அபிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்களது லாரியும் மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    முதுகுளத்தூர், கீழத் தூவல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாள்தோறும் திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    தற்போது போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் பறிமுதல் செய்த வாகனத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×