search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுகலை மருத்துவ படிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் முதுகலை கவுன்சிலிங்கில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற எனது மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று ரூத் கூறியுள்ளார்.
    • தெலுங்கானாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் தடைகளை எதிர்கொண்டார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவை சேர்ந்த 29 வயதான ரூத் ஜான் கொய்யாலா. திருநங்கைகள் பிரிவில் மருத்துவத்தில் முதுகலை படிப்புக்கு தகுதி பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

    நீட் முதுகலை கவுன்சிலிங்கில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற எனது மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று ரூத் கூறியுள்ளார்.

    தற்போது ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருநங்கைகள் பெரும்பாலும் சமூக ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு ஏளனம் மற்றும் அவமதிப்புக்குள்ளாகிறார்கள்.

    ரூத் ஜான் கொய்யாலாவால் அந்த ஏளனங்கள் உடைக்கப்பட்டுள்ளது. அவர் திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார்.

    இந்தியாவில் உள்ள பிற மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுவாக ஆண், பெண் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை பெறுவார்கள். ஆனால் இவர் 3-ம் பாலினத்தவராக இருந்து சேர்க்கை பெற்றுள்ளார். 2022-ல் நீட் முதுகலை சேர்க்கைக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவருக்கு பெண் இருக்கை ஒதுக்கப்பட்டதால் அவர் வாய்ப்பை மறுத்து விட்டார். ரூத் திருநங்கைகள் பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் தெலுங்கானாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் தடைகளை எதிர்கொண்டார்.

    திருநங்கைகளுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், மகளிர் மருத்துவ நிபுணராகவும், மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்ற வேண்டும் என்பது அவரின் கனவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    ×