search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மதிப்பெண்"

    • 8 மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் அதன் பிரமாண்டத்தை பார்த்துவிட்டு, “நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நடந்த பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    8 மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெற்றது.

    அந்த மாநாட்டுக்கு வந்த முதல்-அமைச்சர் அதன் பிரமாண்டத்தை பார்த்துவிட்டு, "நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார். ஏன் அதை தாண்டியும் சொல்கிறேன், முதல் மதிப்பெண்ணும் பெற்றுவிட்டார்" என்றார்.

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கிட்டத்தட்ட மாநாடு போல ஒருங்கிணைத்து நடத்திவரும் ராஜேஸ்குமார் எம்.பி.யை பார்த்து நானும் சொல்கிறேன், " நீங்கள் ஒரு தேர்வில் மட்டும் முதல் மதிப்பெண் வாங்கவில்லை, நடந்த எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீர்கள்.

    இனி நடக்கவுள்ள தேர்வுகளிலும் நீங்களே முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

    பொதுவாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் ராஜேஸ்குமார் எம்.பி. கடந்த தேர்தலின் போது கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்வேன் என சொன்னார். அதையே செய்தும் காண்பித்தார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021-22 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 மற்றும் 3-ம் மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கி னார். பள்ளி ஆசிரியர் செல்வத்துரை முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்று பேசினார்.

    12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற பாலன், 2-ம் இடம் பெற்ற சிபிராஜ், மாணவர்களான லண்டன் மருத்துவர் சரவண வேல், வடிவேலன், சேவுக மூர்த்தி, பொன் சரவணன், பாலசீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல வருடங்களாக முன்னாள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படித்து தொழில் அதிபராக உள்ள கணேசன், ஆசிரியர் முத்துப்பாண்டி, தென்றல், பாலசுப்பிரமணியம், முத்து பிரகாஷ், பிரவீன், குமார், மூர்த்தி, தனசேகரன் உள்ளிட்டோரின் பெரும் முயற்சிக்கு இடையே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

    முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.

    ×