search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடிக்கும் திருவிழா"

    கொட்டாம்பட்டி அருகே தூண்டில் போட்டு நாட்டு வகை மீன்களை பிடித்து அசத்தும் வினோத திருவிழா நடந்தது.
    கொட்டாம்பட்டி:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டியில் அங்குள்ள கோவில் ஊருணியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டாடும் வினோத திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மற்ற நாட்களில் மீன்களின் நலன் கருதி யாரும் தூண்டில் போட அனுமதி கிடையாது.

    இந்தநிலையில் கார்த்திகை மாத தீப திருநாளை முன்னிட்டு, தூண்டில் மூலமாக யார் வேண்டுமானாலும் மீன்களை பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊருணியில் கிராம மக்கள் நேற்று மீன் பிடித் திருவிழாவை நடத்தினர்.

    அங்குள்ள ஊருணியில் ஜிலேபி, விரால், குரவை போன்றவை மட்டுமே வளர்க்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.

    இதில் ஒவ்வொருவரும் தலா 2 கிலோ வீதம் மீன்களை பிடித்து சென்று வீட்டில் சமைத்து உண்டனர். அனைவருக்கும் தேவையான மீன்கள் கிடைத்ததால், ஓட்டக்கோவில்பட்டி கிராமம் முழுவதும் நேற்று மீன் குழம்பு மணம் பரவியது. இவ்வாறு செய்வதால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    ×