search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் வேலை நிறுத்தம்"

    • படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    • தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    சாத்தான்குளம்:

    தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் தூரம் வரையிலான பகுதிக்கு உள்ளேயே சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடிய 12 நாட்டிக்கல் தூரத்தின் அருகே விசைப்படகில் வந்து தினமும் மீன் பிடித்து செல்வதாக கூறப்படுகிறது.

    இதனால் தமிழக மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்லும்போது அவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மீன்பிடி முறையை தடை செய்ய வேண்டும், நேற்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கடலில் மாயமான மீனவரை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வாணவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
    • வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் அடிக்கடி சிங்கள கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 விசைப்படகுகளை எல்லை தண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (18-ந்தேதி) பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இதற்கிடையே நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல் வருகிற 27-ந்தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதோடு, அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நவம்பர் 1-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் தனியார் சார்பில் மீன் பிடிக்கும் உரிமம் பெறப்பட்டு மீன்பிடித்து வந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

    சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை சேர்ந்த கூட்டுறவு சொசைட்டி மீனவர்கள் சுமார் 500 பேர் பரிசல் மூலம் மீன் பிடித்து வந்தனர். இங்கு கட்லா, ரோகு கேலுத்தி, ஜிலேபி போன்ற மீன்களை அவர்கள் பிடித்து வந்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு டன் (ஆயிரம் கிலோ) மீன்களை பிடித்து கொடுத்த போது ஒரு கிலோவுக்கு மீனவர்களுக்கு ரூ.55 வழங்கப்பட்டது.

    ஆனால் தற்போது தனியார் டெண்டர் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர்களுக்கு டெண்டர் வழங்காமல் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றனர்.

    மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை மீன்வளத்துறை இடம் கொடுத்த போது அவர்கள் மீனவர்களுக்கு ஒரு கிலோவுக்கு மீன் ஒரு 35-க்கு கொடுத்தனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபடி ஒரு கிலோ மீனுக்கு ரூ.55 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்ததால் பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    பவானிசாகர் அணை பகுதியில் பரிசல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்று இரவு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னைக்கு சென்று தமிழ்நாடு மீன்வளத்துறை தலைவரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

    • மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும் தெரிகிறது.

    இதனால், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத்தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால், இப்பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கியும் தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசையும், மீனவளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடல் நீரை நம்பி வாழும் மீனவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டியது அரசின் கடமை. எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

      இதற்கிடையே, தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

      இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தர்மபிச்சை மற்றும் ஜவகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதிகாலை கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடாமல் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அவர்களுடன் தூத்துக்குடி டி.எஸ்.பி.சத்யராஜ் தொலைபேசியில் விசைப்படகு உரிமையாளர்களுடன் பேசி காலையில் சமூக தீர்வு காணப்படும் எனவே உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

      இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட மீனவர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை மீன்பிடிக்க செல்லாமல் வேலை கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • மணியன்தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.
      • மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

      வேதாரண்யம்:

      நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுதுறை, புஷ்பவனம், மணியன்தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.இவர்கள் பைபர் மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

      இதனால் நேற்று வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

      இன்று அதிகாலை முதல் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக இன்றும் 2-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

      மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

      • துறைமுகத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை மற்றும் செயற்கை பாறைகள் உள்ளன.
      • தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பைபர் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

      ராயபுரம்:

      காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் 150-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

      துறைமுகத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை மற்றும் செயற்கை பாறைகள் உள்ளன.

      இந்த பகுதியில் மற்ற பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள் விசைப்படகுகளில் வந்து மீன் பிடிப்பதால் பாறைகள் சேதம் அடைவது மட்டுமல்லாமல் மீன்வளமும் பாதிக்கப்படு வதாக காசிமேடு மீனவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

      இதனால் தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பைபர் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

      இந்த நிலையில் கரையோரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்படிபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு பைபர் படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளில் சிவப்புக் கொடி கட்டி உள்ளனர்.

      இதுதொடர்பாக பைபர் படகு மீனவர் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் விசைப் படகுகளில் பவளப்பாறை அருகே வலைவிரித்து மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் தெரிவித்து உள்ளனர்.

      ராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.

      ராமேசுவரம்:

      ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ரோந்து கப்பல்களையும், மீனவர்களின் படகுகள் மீது மோதச்செய்தது.

      இந்த விபத்தில் முனியசாமி என்ற மீனவர் கடலில் விழுந்து இறந்தார். இலங்கை கடற்படையினரின் இந்த செயலை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (15-ந் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      இன்றும் 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 5,000 மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

      ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கச் செல்வதால் மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன் விலை சற்று உயர்ந்துள்ளது.

      பொங்கலைத் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் மீனுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போது ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.

      ×