search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பி"

    • மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    • அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
    • இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.

    நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.

    தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.

    கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.

    • மாலை மலர் செய்தி எதிரொலியால் தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நேசனேரி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு 5 முறை பஸ்கள் வந்து செல்கின்றன.

    இந்த பஸ்களில் திருமங்கலம் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சென்று படித்து வந்தனர். கிராம மக்கள், கல்லூரி மாணவர்கள் இந்த அரசு பஸ்களை நம்பி இருந்தனர். இந்த நிலையில் நேசனேரி- செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின் கம்பிகள் உயரம் குறைந்து தாழ்வா னதாலும், மழைக்கு சாலைகள் குண்டு குழியுமாக இருந்ததாலும் நேசனேரி கிராமத்திற்குள் வராமல் அரசு பஸ்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி மாலை மலரில் வெளியானது.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக இருந்த மின்கம்பங்களை சரி செய்தனர். மேலும் குண்டும் குழியுமான சாலையில் மண் பரப்பப்பட்டு சீராக அமைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரசு பஸ் நேசனேரி கிராமத்திற்கு வந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பேராவூரணி :

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன.

    மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மின்மாற்றியும் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் கூறுகையில், "மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த பதில் கடிதத்தில், 100 தினங்களுக்குள் அகற்றப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பி அகற்றப்படாமல், மின்மாற்றி இடமாற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவிட்டும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இம்மாத இறுதியில் மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளனர்.

    • தேவகோட்டையில் மின் கம்பியில் தொங்கும் கல் சாலையில் செல்வோரின் மீது விழும் அபாயம் உள்ளது.
    • மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் மின்சார கம்பிகள் தொய்வு ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க மின்சார துறையினர் கம்பியில் கல்லை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இந்தச் சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

    கோட்டாட்சியர், ஆணையாளர், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் இந்த சாலையில் உள்ள மின் கம்பியில் கல் தொங்கி கொண்டு இருப்பதால் அது எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்வோரின் தலையை பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறிகையில், மின்சாரத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதே போல் தாழ்வான மின் கம்பிகள் அதிக இடங்களில் செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்சார துறை அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் பலிகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்றார்.

    • தியாகதுருகம் அருகே பராமரிப்பு இன்றி தேக்குமரங்கள் காய்ந்து போனது.
    • அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம் அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 5- ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, தேக்கு, நாவல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் காய்ந்து போனது. மீதமுள்ள மரக் கன்றுகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் எனவும் மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு நடுவே மிகவும் தாழ்வான நிலையில் மின்கம்பி செல்கிறது.

    இது எதிர்பாராத விதமாக யாரேனும் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பிகளை இழுத்து கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள சிகார்பாளையம் சாலை வளைவில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் நிலக்கரி முற்றிலுமாக சாலையோரத்தில் கீழே கொட்டியது. லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் (வயது 25) லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின்கம்பியில் மோதி கவிழ்ந்ததில், உயிர் இழப்பு இல்லாமல் தப்பித்தது, அதிர்ஷ்டவசமாக நிகழ்வாகும். இவ்விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×