search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வெட்டு"

    • அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.
    • இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்று வட்ராப்பகுதியான பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், மந்தியூர், நரையப்பபுரம், அங்கப்புரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுபடுகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள், ஒட்டல் நடத்துபவர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த மின்வெட்டால் இரவு நேரங்களில் வீடுகளில் பெண்கள் சமைக்கவும் மற்றும் தூங்கும்போது மின்விசிறியை இயக்க முடியாமலும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் போதிய மின் பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் போதிய மின் பணியாளர்களை நியமிக்கவும், மின் வெட்டை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
    • நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-

    மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.

    கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.

    மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • பராமரிப்பு பணி நடக்கிறது
    • செறப்பொறியாளர் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பா ளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன்தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென் மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம் பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகு திகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என திருவண் ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

    • காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை மின்நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கீழ்பள்ளிப்பட்டு கேவி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை வல்லம், சாம்கோ, காட்டுக்காநல்லூர், கீழ்பள்ளிப்பட்டு, கீழ்அரசம்பட்டு, வரகூர், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், கொங்கராம்பட்டு, ரெட்டிபாளையம், மேட்டுக்குடிசை மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல் சாத்துமதுரை துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கணியம்பாடி, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, நெல்வாய், காட்டுப்புத்தூர், துத்திப்பட்டு, புதூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் கணியம்பாடி அருகே உள்ள சாத்துமதுரை ஆகிய 2 துணை மின் நிலையங்களில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை சாத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், மூஞ்சூர்பட்டு, நெல்வாய், கனியம்பாடி குளவிமேடு, சாத்துப்பாளையம் மற்றும் உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    மேலும் சாம்கோ, வல்லம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் கீழ்பள்ளிப்பட்டு, கொங்க ராம்பட்டு, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், வரகூர், புதூர், கீழ்அரசம்பட்டு உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கட்டுபடி, நெல்வாய், கணியம்பாடி, துத்திப்பட்டு, சோழவரம், நாகநதி, சாம்கோ, வல்லம், வரகூர்புதூர், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம், மோட்டுப்பாளையம், கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர், கீழ் அரசம்பட்டு மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், இராஜாதோப்பு, நெடுங்காம்பூண்டி, மேட்டுபாளையம், கொளத்தூர், இராயம்பேட்டை, ஆண்டாளூர், நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டு சித்தாமூர், சிறுநாத்தூர், நாரியமங்கலம், கனபாபுரம், கழிகுளம், சோமாசிபாடி, சோ.நம்மியந்தல் ஆராஞ்சி, வழுதலங்குணம், மேக்களூர் மற்றும் சுற்றுப்புறச் சூழலை பகுதியில் உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ராஜசேகரன் (இயக்குதல் - பராமரித்தல்) தெரிவித்தார்.

    ×