search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் உற்பத்தி பாதிப்பு"

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது.
    • முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையின் 2, 3-ம் அலகுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
    • கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மீஞ்சூர்:

    அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2வது அலகில் செயல்பட்ட கொதிகலனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.
    • 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது

    மேட்டூர்:

    மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது இதன் காரணமாக இந்த 3-வது யூனிட்டில் மின்உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டு பழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது.
    • அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்களுடன் கூடிய பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும் இயங்கி வருகிறது.

    இதில், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகா வாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    • வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளிலும் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 1200 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் பழுதை மின் ஊழியர்கள் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வல்லூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    வல்லூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஓராண்டுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை
    • இதன் காரணமாக சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ், மணலாறு நீர் தேக்கங்களில் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு இரவங்கலாறு நீர் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தூவானம் பகுதியில் உள்ள மதகு மூலம் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பின்னர் மலைப்பள்ளம் வழியாக 2 கி.மீ தூரம் 22 ஆங்கர் தூண்கள் அமைத்து பென்ஸ்டாக் எனப்படும் ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் சுருளியாறு மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் கயத்தாறு மின் வட்டப்பகுதி மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முழுக்க முழுக்க உள்ளூர் தேவைக்கே இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி 12 வது ஆங்கர் தூண் மேலே உள்ள பென்ஸ்டாக் குழாயில் 20 மீட்டர் அளவில் வெடிப்பு ஏற்பட்டது.இதனால் தண்ணீர் வீணாக வெளியே சென்றது.

    இதன் காரணமாக மின் நிலையத்துக்கு தண்ணீர் வரத்து நின்றதுடன் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும், பொதுமக்களுக்கு மின் தேவையும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தொடர் மழை காரணமாக தூவானம் அணை நிரம்பியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள தண்ணீர் வேறு வழியின்றி சுருளி அருவிக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் மழை நின்ற பிறகும் சுருளி அருவி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படு கிறது. சுருளி அருவியை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து ள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பென்ஸ்டாக் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.
    • கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினமும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்திற்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதில் சுமார் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் அணு உலைகளில் எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும் பணிகள் நடைபெறும். அதனை முன்னிட்டு அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

    ×