search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் உற்பத்தி அதிகரிப்பு"

    • வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதனைதொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கடந்த சில நாட்களாக 511 கனஅடிநீர் திறக்கப்பட்டதால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதனைதொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் முல்லைபெரியாறு அணை பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    மேலும் ரூல்கர்வ் முறைப்படி தண்ணீர் திறப்பை அதிகரிக்க முடியாது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று வரை 511 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் 135.55 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. அணைக்கு 732 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக நீடிக்கிறது. 100 கனஅடி நீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 60 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. தேக்கடி 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக 511 கனஅடிநீர் திறக்கப்பட்டதால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இன்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 135 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது.

    ×