search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி பஸ்கள்"

    • பழுதடைந்த நிலையில் டிரைவர், கண்டக்டர் இல்லாததால் ஒரு சில இடங்களில் மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பராமரிப்பு பணிக்காக 25 பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகிய சாலைகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த பஸ் வசதி மிகவும் உதவியாக இருந்தன.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இந்த திட்டத்தால் கூலி தொழிலாளர்கள், பெண்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. சென்னையில் 140 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது பெரும்பாலான மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    பழுதடைந்த நிலையில் டிரைவர், கண்டக்டர் இல்லாததால் ஒரு சில இடங்களில் மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மினி பஸ்கள் எல்லா பகுதிக்கும் இயக்கப்பட்டன.

    தற்போது 120 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. 25 பஸ்கள் பழுதடைந்து ஓட்ட முடியாத நிலையிலும், டிரைவர்- கண்டக்டர் பற்றாக்குறையாலும் ஓட்ட முடியவில்லை. அந்த பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கின்றன.

    ஏற்கனவே தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்து கழகம் மினி பஸ்களை பராமரித்து இயக்குவதற்கு தேவையான ஊழியர்கள், உதிரி பாகங்கள் இல்லாததால் முழு அளவில் ஓட்ட முடியவில்லை. மினி பஸ்கள் ஓடாத இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், நகர்களுக்கு மினி பஸ் அதிகளவில் இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கிடையில் தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடப்பதால் மினி பஸ்களை முழுமையாக இயக்க முடியவில்லை. வழக்கமாக 10 டிரிப் இயக்க வேண்டிய பஸ்களை 7, 8 டிரிப் தான் ஓட்ட முடிகிறது. போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதையால் கால தாமதம் ஆகிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, மினிபஸ்கள் நிறுத்தப்படவில்லை. பராமரிப்பு பணிக்காக 25 பஸ்கள் இயக்கப்படவில்லை. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 25 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படுகின்ற வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

    விரிவாக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ஷேர் ஆட்டோக்களில் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். மினிபஸ் அதிகளவில் இயக்கினால் மக்களுக்கு உதவியாக இருக்கும். அதனால் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    ×