search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிக் 27 போர் விமானம். நொறுங்கி விழுந்தது"

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் இன்று மாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். #MIG27crashed #jaisalmerMIG27crashed
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மெர் மாவட்டத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று மாலை MIG 27 ரகத்தை சேர்ந்த ஒரு போர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

    அம்மாவட்டத்தின் போக்ரான் பகுதி அருகே உள்ள ஏட்டா கிராமத்தின் மீது பறந்து சென்றபோது மாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.  அதில் சென்ற ஒரு விமானி அவசர கதவு வழியாக பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

    இவ்விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #MIG27crashed  #jaisalmerMIG27crashed 
    தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் ஜனவரி 27-ம் தேதி திறக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. #TTD #TTDTemple #KanyaKumari
    திருமலை:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.
     
    அதைத்தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை அதிகாரியான அனில் குமார் சிங்கால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், தேவஸ்தானம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி கோவில்கள் போன்று கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில் ஜனவரி 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் திட்டமிட்டபடி மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். #TTD  #TTDTemple #KanyaKumari
    தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி நிலைகுலைந்து ஓடி முன்னால் சென்ற வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி டயர் வெடித்தது.

    இதில் நிலைகுலைந்த லாரி முன்னால் சென்ற வாகனங்களின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி பேருந்து, டாக்சி மற்றும் சில வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்.

    இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர் எனவும், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். சாலை விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    ×