search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட செயலாளர்கள் கூட்டம்"

    • 12 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி தலைமை கழகத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, டி.ஜெயக்குமார், கே.பி.கந்தன், ஆதிராஜாராம், விருகை வி.என்.ரவி, ஆர்.எல்.ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 12 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டணியை பற்றி யோசிக்காமல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்கு அடிப்படை பூத் கமிட்டிகள். எனவே, பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து தலைமைக் கழகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.


    கிளைக் கழக அளவில் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் மனங்களில் பதிய வைக்க வேண்டும்.

    தெருமுனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்சியினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள். அவர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையுடன் நல்ல அந்தஸ்தில் இருக்க வேண்டும். ஆரம்பகால கட்சி தொண்டர்களாக இருக்க வேண்டும். தொகுதியில் பிரபலமாகவும், மக்கள் செல்வாக்கு உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

    அப்படிப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தலைமைக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார்கள்.

    இளம்பெண்கள், இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணிகளை முடுக்கிவிட்டு மக்கள் மத்தியில் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ×